இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள 21 மிக்29 போர் விமானங்கள் !!
1 min read

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள 21 மிக்29 போர் விமானங்கள் !!

இந்திய விமானப்படைக்கு மிக் நிறுவனம் 21 மிக்29 விமானங்களின் உடல்பகுதியை விற்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் இல்யா தராசென்கோ கூறியுள்ளார்.

20 வருடக்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இந்த உடல்பகுதிகளை அப்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அப்படியே வைத்துள்ளனர்.

தற்போது இந்திய விமானப்படையின் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விமான உடல்பகுதிகள் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் இந்தியாவிலேயே மிக்29யுபிஜி தரத்திற்கு கட்டமைக்கப்பட உள்ளது.

இந்த விமானங்கள் அடுத்த 30வருடங்களுக்கு சேவை புரியும் என இல்யா தராசென்கோ கூறினார்.