Breaking News

5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்-ரேசங் லா போர்

  • Tamil Defense
  • July 18, 2020
  • Comments Off on 5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்-ரேசங் லா போர்

1962 போரில் ரேசங் லா என்னுமிடத்தில் இந்திய காவல் நிலையை  குமான் ரெஜிமென்டை சேர்ந்த வெறும் 120 வீரர்கள் காவல் காத்து நின்றனர்.

நவம்பர் 18,1962, லடாக்கின் பனிமூடிய சூசுல் பகுதியில் நடைபெற்ற இந்த சண்டை வரலாற்றிலேயே இந்திய வீரர்கள் நின்று எதிர்த்து அடித்த பெருமைக்குரிய போராக உள்ளது.

13வது பட்டாலியன் குமான் ரெஜிமென்டின் சார்லி கம்பெனியை சேர்ந்த 120 வீரர்கள் மேஜர் ஷைதான் சிங் அவர்கள் தலைமையில் லடாக்கில் ஆக முக்கியத்துவம் வாய்ந்த சூசுல் வான் ஓடு தளத்தை காவல் காத்து நின்றனர்.அந்த பகுதியில் இந்திய படைகளின் செயல்பாட்டிற்கு இந்த தளம் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

5000 முதல் 6000 சீனப்படை பெரிய அளிவிலான ஆயுதங்கள் (7.62 மிமீ தானியங்கி ரைபிள்கள் ; நடுத்தர மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள்; 120மிமீ , 81மிமீ மற்றும் 60மிமீ மோர்ட்டார்கள் ; 132மிமீ ராக்கெட்டுகள்; மற்றும் 75மிமீ மற்றும் 57மிமீ ரீகாய்லெஸ் துப்பாக்கிகள் )கொண்டு இந்திய நிலையை அதிகாலை தாக்கினர்.

இங்கு போரிட்ட வீரர்களுக்கு இந்திய ஆர்டில்லரி படைகளால் உதவ முடியாத நிலை ஏற்பட்டது.காரணம் மலைமுகடுகள் ஆர்டில்லரி உதவியை தடுத்தன.இனி வீரர்கள் மட்டும் எந்த உதவியும் இல்லாமல் சுயமாக போரிட வேணடும் என்ற நிலை ஏற்பட்டது.

பின்வாங்குதா? அப்படி என்றால் என்ன? வீரர்கள் முடிவு எடுத்தனர்.மேஜர் சைதான் சிங் மற்றும் அவரது வீரர்கள் கடைசி வீரர்,கடைசி குண்டு மற்றும் கடைசி மூச்சு வரை போராட முடிவு செய்தனர்.

போரின் முடிவில் நமது 120 வீரர்கள் குறைந்தது 1300 எதிரி வீரர்களை வீழ்த்தினர்.114 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.6 வீரர்கள் சீனப்படைகளால் போர்க்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.ஆறு பேருமே சீனப் பிடியில் இருந்து நழுவி தப்பினர்.

அதிகாலை 3.30 மணி.சூசுல் பகுதிகளை சீனர்கள் தாக்க தொடங்கினர்.ஆனால் இந்திய வீரர்கள் பின்நகரவில்லை.தங்களிடம் இருந்த அனைத்தையும் கொண்டு தாக்க தொடங்கினர்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்தும் மேஜர் சைதான் சிங் அவர்கள் தனது படையை வீரத்துடன் வழிநடத்தினார்.கற்பனைக்கு எட்டாத அளவில் நமது வீரர்கள் நிகறற்ற வீரத்துடன் தாக்க தொடங்கினர்.போரின் முடிவில் மேஜர் சைதான் சிங் அவர்களுக்கு பரம்வீர்சக்ரா வழங்கப்பட்டது.தவிர ஐந்து வீர்சக்ரா மற்றும் நான்கு சேனா மெடல்களும் வழங்கப்பட்டன.

ஹானரி கேப்டன் ராமசந்திர யாதவ் அவர்கள் படுகாயமடைந்து பின்பு உயிர்பிழைத்தார்.அவர் பின்னாளில் சீனர்கள் முதலில் ஆக்ரோசமாக தாக்கியதாக கூறினார்.அலை அலையாய் இரு முறை சீனர்கள் தாக்கினர்.முதல் அலையை இந்திய வீரர்கள் அடித்து துவைத்தனர்.இரண்டாம் அலையின் போது நமது வீரர்களிடம் இருந்த குண்டுகள் முடிவடைந்தன.அடுத்து கைகளாலேயே எதிரிகளை அடித்து வீழ்த்த தொடங்கினர்.

ஹா/கே யாதவ் அவர்கள் கூற்றுப்படி, நாய்க் ராம் சிங் அவர்களின் வீரம் நமக்கு தெரிய வருகிறது.அவர் ஒரு மல்யுத்த வீரர்.ஒற்றை ஆளாக பல சீன வீரர்களை கைகளால் அடித்தே வீழ்த்தியுள்ளார்.ஒரு எதிரி துப்பாக்கியால் அவரது தலையை தாக்கும் வரை கைகளால் பல சீன வீரர்களை அடித்தே வீழ்த்தியுள்ளார்.

போருக்கு பின்பு அந்த நிலையை இந்திய இராணுவம் காணச் சென்றுள்ளது.அங்கு நமது வீரர்களின் உயிரற்ற உடல்கள் கிடப்பதை சக வீரர்கள் கண்டனர்.தங்களது பதுங்கு குழிகளில் கையில் துப்பாக்கியுடன் எதிரியிடம் போரிட்டு வீரமரணம் அடைந்து அப்படியே வீரர்கள் கிடந்துள்ளனர்.

2 இன்ச் மோர்ட்டர் ஏவும் இராணுவ வீரர் கையில் கிரேனேடு இருக்க அப்படியே வீரமரணம் அடைந்துள்ளார்.மெடிக்கல் வீரர்கள் கையில் மருந்துகள் இருந்தன…

வீரவணக்கம்