ஐ.நா அமைதிப்படைக்கு மஹிந்த்ரா கவச வாகனம் !!

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on ஐ.நா அமைதிப்படைக்கு மஹிந்த்ரா கவச வாகனம் !!

சமீபத்தில் மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார் அதில் “மஹிந்த்ரா கவச வாகனம் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணிகளுக்காக சப்ளை செய்யப்பட்டதாக தெரிவித்தார்”.

இந்த வாகனத்தில் வெடிகுண்டுகளை கையாளும் வகையில் இயந்திர கை ஒன்று உள்ளது, மேலும் இது கண்ணிவெடி தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது, சாலைகளற்ற கரடு முரடான நிலபரப்பிலும் திறம்பட செயல்படும் திறன் கொண்டது.

இந்த வாகனம் 7.62×51, 7.62×39 மற்றும் 5.56×45 ஆகிய தோட்டாக்களை 10மீட்டர் தொலைவில் இருந்து 90டிகிரி கோணத்தில் சுட்டாலும் துளைக்க விடாது.

மேலும் பி.ஏ.இ நிறுவனம் நடத்திய சோதனையில் வாகனத்திற்கு அடியில் 14கிலோ வெடிபொருள் மற்றும் பின்பகுதி சக்கரங்களின் கீழ் 21கிலோ வெடிபொருள் வெடித்திலும் போதுமான பாதுகாப்பை வழங்கும் தன்மை கொண்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனத்தில் கூரைப்பகுதியில் ஹேட்ச் வசதி, சுடுவதற்கு ஏற்ற கன் போர்ட்கள், வழிகாட்டி அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், பொது அறிவிப்பு அமைப்புகள் ஆகியவை உள்ளன.