
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டத்தில் உள்ள தனாமந்தி பகுதியில் நடைபெற்ற சோதனையில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.
இது குறித்து ரஜோவ்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தன் கோலி கூறுகையில் புதன்கிழமை அன்று குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது, இதனையடுத்து நாங்கள் அப்பகுதிக்கு விரைந்தோம்.
தனாமந்தி பகுதி முழுவதும் 38ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிரடிப்படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஒரு பகுதியில் மிகப்பெரிய ஆயுத குவியல் இருந்ததை கண்டு பிடித்தோம் என்றார்.
1 பிகா இலகுரக இயந்திர துப்பாக்கி, 1 சீன பிஸ்டல், 1 நாட்டு துப்பாக்கி, 1 அன்டெனா, 1 டேர் ரெக்கார்டர் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை கைபற்றப்பட்டன என கூறினார்.
38ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.