
உளவு பணிகளில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் அவர்களை 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
ஆனால் இந்திய அரசும் குல்பூஷன் ஜாதவும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
பாகிஸ்தானிய சிறையில் வாடிய அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்தியா குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை பாகிஸ்தானிய நீதிமன்றம் நிராகரித்து மரண தண்டனையை தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டது, மேலும் இந்த வழக்கை மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மறுத்து விட்டதாக கூறியுள்ளது.