இந்திய பெருங்கடலின் அரசன்- INS விக்ரமாதித்யா
1 min read

இந்திய பெருங்கடலின் அரசன்- INS விக்ரமாதித்யா

ஒரு மூன்றாம் உலக நாடால் மிக அசாதாரண முறையில் ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்கி இயக்க முடியுமென்றால் அது இந்தியா தான்.மற்ற மூன்றாம் உலக நாடுகள் சில விமானம் தாங்கி  கப்பல்கள் இயக்கினாலும் இந்தியா இதை இயக்குவதில் அளவற்ற அனுபவச் செல்வங்களை கொண்டுள்ளது.

உண்மையில் ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்குவது கூட எளிதாக இருக்கலாம் ஆனால் அதை பராமரித்து காப்பது அதிக செலவுடைய வேலை.எதற்காக இத்தனை செலவு செய்து ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்கி பாதுகாக்க வேண்டும்.கண்டிப்பாக காரணம் இருக்கும்!. ஒரு குட்டி நகரும் தீவு தான் விக்ரமாதித்யா.

விக்ரமாதித்யா ஒரு  short take-off, but assisted recovery (STOBAR) வகை விமானம் தாங்கி கப்பல்.இரஷ்யாவின் கப்பலை வாங்கி மாற்றியமைத்து உருவாக்கப்பட்டது தான் விக்ரமாதித்யா.கடந்த 2013 நவம்பரில் படையில் இணைக்கப்பட்டது விக்ரமாதித்யா.

புதிய புரோபல்சன் அமைப்பு, புதிய ஹல் மற்றும் நவீன சென்சார்கள் மற்றும் விமானம் பறக்கும் சாலை அமைப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.மிக்-29 விமானங்களுடன் மே 2014ல் முழுமையானது விக்ரமாதித்யா.

கப்பலில் மொத்தம் 30 தொலைதூர பலபணி போர்விமானங்கள்,கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ,வான்-வான் ஏவுகணைகள்,வழிகாட்டப்பட்ட குண்டுகள் மற்றும் இராக்கெட்டுகள் என சகிதமும் உள்ளன.மிக் 29, kamov 31 ,காமோவ் 28, சீ கிங் த்ருவ் மற்றும் செடக் வானூர்திகள் உள்ளன.

2500டன் ஸ்டீல்கள் கொண்டு 234 புதிய ஹல் பிரிவுகள் ஏற்படுத்த பட்டது.284m நீளமும், a maximum 60m அகலமும்,  60m உயரமும், 44,500t எடையும் கொண்டது.கப்பலில் மொத்தம் 22 தளம் உள்ளன.2500 தனி இடம் உள்ளது.இதில்  1,750 புதிதாய் ஏற்படுத்தப்பட்டது.கப்பல் இயக்குபவர்கள் உள்ளிட்டு கிட்டத்தட்ட 1600 பேர்கள் உள்ளனர்.இதில் உள்ள இரு ஆஸ்மோசிஸ் கருவி மூலம் தினமும்  400t  சுத்தமான தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.

மேலும் பழைய கப்பலில் இருந்த வயர்கள் அகற்றப்பட்டு புதிய வயர்கள் இணைக்கப்பட்டன.

தவிர கப்பலில் பல அதிநவீன கருவிகள் இணைக்கப்பட்டன.இந்தியாவின்  launch and recovery அமைப்புகள் ,தொலைதூர வான் கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் அதிநவீன எலக்ட்ரானிக் போர் கருவிகள் இணைக்கப்பட்டன.30 நாட் வேகத்தில் 7000 நாட்டிகல் மைல் வரை செல்லக்கூடியது.ஒரு முறை தேவையான சப்ளைகள் நிரப்பப்பட்டால் கப்பல் 45 நாட்கள் வரை பயணிக்க முடியும்.இதற்கு 8000t அதிவேக டீசல் நிரப்பப்படுகிறது.

கப்பல் மொத்தமாக 2.35 பில்லியன் டாலர்கள் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

2013 நவம்பர் 27ல் இரஷ்யாவின் செவெரொட்வின்ஸ்க்கில் இருந்து 10,212 நாட்டிகல் மைல் பயணித்து தனது துறைமுகமான ஐஎன்எஸ் கடம்பாவிற்கு 26 நாட்கள் பயணித்து வந்தது.இடையில் லிஸ்பன் நகரத்தில் மட்டுமே சிறிது நேரம் நின்று வந்தது.

இதன் முதல் கமாண்டர் கமோடோர் சுராஜ் பெர்ரி அவர்கள் தான்.இந்திய வீரர்கள் தவிர்த்து 177 இரஷ்யவீரர்களும் இந்த கப்பலில் இந்தியா வந்தனர்.அவர்கள் ஒரு வருடம் கப்பலில் பணியாற்றினர்.

விக்ரமாதித்யாவில் பணியாற்ற மிக்-29 விமானிகள் பல பயிற்சிகளை மேற்கொண்டனர்.முதல் விமானம் 8பெப் 2014ல் கப்பலில் இறங்கியது.

அதன் பிறகு இலங்கை ,மாலத்தீவு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் விக்ரமாதித்யா அனுப்பப்பட்டது.

போர் என்று வந்தால் விக்ரமாதித்யா இந்திய படைகளுக்கு பேருதவியாக இருக்கும்.போர்தொடுத்த நாடுகள் மீது தனது விமானங்கள் மூலம் தொடர்ச்சியான தாக்குதலை விக்ரமாதித்யாவால் நடத்த முடியும்.