1 min read
“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” ஹாங்காங் பிரச்சனை குறித்து இந்தியா அதிரடி கருத்து
ஹாங்காங்கில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா ஐக்கிய நாடுகள் சபை சீரியசாக இந்த பிரச்சனையை தீர்க்க வழி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.சீனா புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்ததற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்களும் அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக ஐநாவுக்கான நிரந்தர இந்திய தூதர் ராஜிவ் சந்தர் கூறியுள்ளார்.
இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா,பிரிட்டன் போன்ற உலக நாடுகள் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக தங்களது கருத்துக்களை கூறி வருகினறனர்.