
இந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான திட்டம் குறித்து கருத்து கேட்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.
அதற்கு பதிலளித்த தனியார் நிறுவனங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமானது, மத்திய அரசின் நிதியை பெற்று இயங்கும் நிறுவனம் ஆகவே அந்த நிறுவனத்தை இந்த போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளன.
மேலும் தனியார் நிறுவனங்களையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்தால் தான் போட்டி ஆரோக்கியமாக இருக்கும் என கூறியுள்ளன.
இந்த திட்டத்தில் மஹிந்த்ரா டிஃபன்ஸ், பாரத் ஃபோர்ஜ், அதானி டிஃபன்ஸ் மற்றும் டாடா ஏரோஸ்பேஸ் அன்ட் டிஃபன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.