1 min read
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் கைது !!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தலைநகர் ஶ்ரீநகரில் பிரிவினைவாத தலைவரான அஷ்ரஃப் செஹ்ராய் அவனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளான்.
இவன் தெஹ்ரீக் இ இன்சாஃப் எனும் அமைப்பின் தலைவன் ஆவான். காஷ்மீர் தியாகிகள் தினம் எனப்படும் சுஹாதா இ காஷ்மீர் நாளை முன்னிட்டு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.
இவனது மகன் ஜூனாயத் செஹ்ராய் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் மத்திய காஷ்மீர் பிரிவின் கமாண்டராக இருந்த காலத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒன்றில் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.