
பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள 36 ரபேல் விமானங்களில் முதல் தொகுதி ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன.இந்தியா வரும் விமானங்கள் ஹரியானாவில் உள்ள அம்பாலா தளத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அம்பாலா பகுதியில் காலநிலை கணிக்க முடியாமல் மாறி வருவதால் பிரச்சனை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக ஜோத்பூர் தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்படி ஜோத்பூர் தளத்தில் தரையிறக்கப்பட்டால் அங்கேயே இந்த விமானங்கள் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.