எல்லையோர உள்கட்டமைப்பு பணிகளுக்கு பின்னர் தற்போது முக்கிய கடற்படை தள கட்டுமான பணிக்கு தொழிலாளர்களை அனுப்பும் ஜார்க்கண்ட் மாநில அரசு !!

இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைகளில் மத்திய அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் தனது மாநிலத்தில் இருந்து எல்லையோர சாலை கட்டுமான அமைப்புக்கு பல ஆயிரம் பணியாளர்களை அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு அருகே மிகப்பெரிய புதிய கடற்படை தளம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகளை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 1000 பணியாளர்களை விசாகப்பட்டினம் கொண்டு செல்ல அனுமதி கேட்டு அந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன்படி அம்மாநில அரசும் அனுமதி கொடுத்துள்ளது.

மொத்தமாக இந்த பணிக்கு 3000 பணியாளர்களை கொண்டு செல்ல லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் விரும்புகிறது.

இந்த கடற்படை தளம் ப்ராஜெக்ட் வர்ஷா எனும் திட்டத்தின் அங்கமாகும். சீனா தென்சீன கடலில் ஹைனான் தீவில் கட்டி வைத்திருக்கும் மிகப்பெரிய கடற்படை தளத்திற்கு இது நிகரானது என கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் டஜன் கணக்கான கப்பல்களை நிறுத்தவும், மலையை குடைந்து அதில் நீர்மூழ்கிகளை நிறுத்தவும் இதில் வசதிகள் உள்ளன, ஆகவே நீர்மூழ்கிகளின் நடமாட்த்தையும் இருப்பையும் எதரிகளால் அறிந்து கொள்ள முடியாது என்பது இதன் சிறப்பு ஆகும்.