1 min read
6 ரோந்து கப்பல்களை கட்ட ஜப்பானுடன் வியட்நாம் ஒப்பந்தம் !!
வியட்நாம் அரசு கடந்த 28ஆம் தேதி அன்று 6 ரோந்து கலன்களை கட்ட ஜப்பானுடன் சுமார் 348மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை உறுதி செய்தது.
இந்த பணத்தை வியட்நாம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிடம் இருந்து பெறும், இந்த பணத்தை கொண்டு ரோந்து கலன்களை வியட்நாம் வாங்கும்.
6 ரோந்து கலன்களும் 2025ஆம் ஆண்டு வாக்கில் வியட்நாம் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க படும்.
இந்த கலன்கள் வியட்நாமின் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் வணிகம், போக்குவரத்து ஆகியவற்றை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும்.
அமெரிக்க அரசு கடந்த வருடம் வியட்நாம் கடலோர காவல்படைக்கு ஒரு கப்பலை வழங்க உள்ளதாக அறிவித்தது.
ஏற்கனவே அமெரிக்கா 18 மெட்டல் ஷார்க் ரோந்து படகுகளை கடந்த மூன்று வருடங்களில் வியட்நாமுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.