
கிழக்கு லடாக் எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்சனையில் இந்தியாவிற்கு தனது ஆதரவை ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு செகரட்டரி ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்கலா அவர்கள் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை குறித்து ஜப்பான் தூதர் சடோஷீ சுசுகி அவர்களிடம் விளக்கி கூறியுள்ளார்.
இதில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் எல்லையை மாற்றியமைக்கும் சீனாவின் செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கியது.
இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என சடோஷி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய சீன இராணுவங்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.போராக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
ஜீன் 15 மோதலுக்கு பிறகு நிலைமை மோசமானது.ஆனால் அதற்கு பிறகு தற்போது இரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளும் பின்வாங்க சம்மதித்துள்ளன எனினும் இன்னும் பின்வாங்கவில்லை.