
ஜப்பான் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல் காரணமாக பல நட்பு நாடுகளுடன் தனது உறவை மேம்படுத்தி கொள்ள விரும்புகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் ரகசிய தகவல் பாதுகாப்பு சட்டத்தில் கடந்த மாதம் சில மாற்றங்களை செய்தது.
அதன்படி இனி இந்தியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தகவல்களை ஜப்பானால் பரிமாறி கொள்ள முடியும். இச்சட்டத்தில் ஏற்கனவே அமெரிக்கா இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின் மூலமாக சீன ராணுவ நடமாட்டங்கள் குறித்த தகவல்களை மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், அந்த நாடுகளின் ராணுவங்களுடன் இணைந்து செயல்படவும் வழிவகை செய்கிறது.