ஹாங்காங் மக்களுக்கு உதவ ஜப்பான் முடிவு; சீனாவுக்கு அடுத்த சிக்கல் !!

ஜப்பானிய அரசு ஹாங்காங் மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளது மேலும் சீனாவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே ஜப்பானில் இருக்கும் ஹாங்காங் மக்களுடைய விசா கால வரைமுறைகளை நீட்டிக்க உள்ள ஜப்பான் அரசு புதிதாக விசா பெற விரும்புவோருக்கான விதிகளை தளர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சீனா புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளவும் அதில் தொடர்புடையோரின் சொத்துக்களை முடக்கவும் சட்டம் இயற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங் பகுதியில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தனது அதிகாரத்தை சீன அரசு மட்டற்ற அளவில் நிலைநாட்ட நினைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.