இந்தியா அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானிலும் டிக் டாக் தடை ??

  • Tamil Defense
  • July 31, 2020
  • Comments Off on இந்தியா அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானிலும் டிக் டாக் தடை ??

சில ஜப்பானிய சட்ட நிபுணர்கள் ஜப்பானில் டிக் டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளை தடை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான NHK செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் தகவல் திருட்டு மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக டிக் டாக் செயலிக்கு தடை விதித்தன, இதே கவலையை தெரிவித்துள்ள ஜப்பானிய சட்ட நிபுணர்கள் செப்டம்பர் மாதம் வாக்கில் அரசுக்கு கோரிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

டிக் டாக் செயலி முதலில் வெற்றிகரமாக செயல்பட தொடங்கிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது, ஜப்பானிய பிரபலங்கள் மூலம் விளம்பரபடுத்தி டிக் டாக் ஜப்பானில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.