
தென்சீன கடல் விவகாரம் மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளுடனான சீனாவின் உறவு மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில் ஃபிலிப்பைன்ஸ் ,ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் நேரடியாகவே சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன.
ஃபிலிப்பைன்ஸ் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை சீனா மதித்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளது.
மலேசியா தனது பங்குக்கு பல முறை சீன அரசுக்கு நேரடியாக ராஜதந்திர ரீதியான எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
ஜப்பான் அரசு தனது புதிய பாதுகாப்பு கொள்கையில் சீனாவின் அடாவடித்தனத்திற்கு மிகுந்த கவனம் கொடுத்துள்ளது.
மேலும் சீனாவின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையிலான செயல்பாடுகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது.