சீனாவுக்கெதிரான பலம்: 105 எப்-35 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்கும் ஜப்பான்

  • Tamil Defense
  • July 10, 2020
  • Comments Off on சீனாவுக்கெதிரான பலம்: 105 எப்-35 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்கும் ஜப்பான்

சீனாவுக்கெதிராக தனது படை பலத்தை அதிகரிக்கும் வண்ணம் அமெரிக்காவிடம் இருந்து 105 F-35 ஸ்டீல்த் ஐந்தாம் தலைமுறை விமானங்களை சுமார் $23.11 பில்லியன் டாலர்கள் செலவில்
பெற உள்ளது.

63 F-35A விமானங்கள் மற்றும்  42 F-35B விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும் ரக விமானங்களை பெற உள்ளது.
இது குறித்து கூறியுள்ள அமெரிக்கா ஆசிய பசிபிக் பகுதியின் முக்கிய கூட்டாளியான ஜப்பானின் படை பலத்தை இது அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

ஜப்பானுடைய 2020/2021க்கான பாதுகாப்பு நிநி $50.3 பில்லியன் டாலர்களாக உள்ளது.வடகொரியா மற்றும் சீனாவிடம் இருந்து தொடர் அச்சுறுத்துதல்கள் வருவதால் போர்விமானங்கள் மற்றும் வான்பாதுகாப்பு அமைப்புகளை வாங்க வருகிறது ஜப்பான்.