கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான ஹார்பூன் ஏவுகணைகளுடன் அரை ஸ்குவாட்ரான்கள் அளவு ஜகுவார் விமானங்கள் கார் நிகோபார் தீவுப் பகுதிகளுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
ஹார்பூன் ஒரு அமெரிக்கத் தயாரிப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.மேம்படுத்தப்பட்டு நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தும் ஒரு நம்பத்தகுந்த நவீன ஏவுகணையாக இது உள்ளது.கப்பல் எதிர்ப்பு ஆபரேசன்களுக்கு இந்த ஏவுகணை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.போர்க்கப்பல்களில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை கடந்து கப்பலை தாக்க ஏற்றவாறு கடற்பரப்பை ஒட்டிப் பறக்கும் திறனுடையது.
போர்விமானங்கள்,போர்க்கப்பல்கள் , நீர்மூழ்கிகள் மற்றும் கடற்கரை ஓர பேட்டரிகள் ஆகியவற்றில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.ஏவப்படும் இடத்தைப் பொறுத்து 280கிமீ வரை இந்த ஏவுகணை தாக்கும்.
இந்திய விமானப்படையும் இந்திய கடற்படையும் தற்போது இந்த ஏவுகணைகளை உபயோகித்து வருகின்றன.
ஹை சப்சோனிக் வேகம் அதாவது மணிக்கு 850கிமீ வரை வேகம் கொண்டவை இந்த ஹார்பூன் ஏவுகணைகள்.ஒரு கப்பலில் இருந்து இலக்கை நோக்கி ஏவப்பட்டால் கடற்பரப்பை ஒட்டியவாறே இலக்கை தாக்கும்.இதன் மூலம் எதிரி போர்க்கப்பலின் வான் பாதுகாப்பு அமைப்பை துளைத்து செல்ல முடியும்.
221கிகி வெடிபொருளுடன் ஒரு பெரிய போர்க்கப்பலை கூட செயலிழக்கச் செய்ய ஹார்பூனால் முடியும்.அமெரிக்க பாதுகாப்பு படைகள் பலமுறை இந்த ஹார்பூன் ஏவுகணையை ஆபரேசன்களில் உபயோகித்துள்ளன.
ஆஸ்திரேலியா,ஜப்பான்,இஸ்ரேல்,ஜெர்மனி என உலகின் பல்வேறு நாடுகள் இந்த ஏவுகணையை உபயோகித்து வருகின்றன.
இந்தியாவை பொறுத்த வரை நமது ஜாகுவார் விமானங்களில் சில கடற்படை செயல்பாடுகளுக்காக மாற்றியமைக்கப்பட்டு ஹார்பூன் ஏவுகணையை சுமந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதன் பிறகு இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானமான பி-8ஐ ஹார்பூன் ஏவுகணைகளுடன் பறக்கும் திறன் கொண்டது.கப்பல்களை பொறுத்த வரை நமது ஷிசுமார் வகை நீர்மூழ்கிகள் இந்த ஹார்பூன் ஏவுகணைகளை ஏவ வல்லது.
மிக்-29 அல்லது மற்ற விமானங்களில் வைத்து இந்த ஹார்பூன் ஏவுகணைகளை ஏவ முடியாது.