சீனாவின் ஜே-20 விமானம் அருகே கூட வரமுடியாது-ரபேலின் திறனை வியந்த முன்னாள் தளபதி தனோவா

சீனப்படைகள் திபத்தில் காத்திருக்கும் நேரத்தில் இந்திய விமானப்படைக்கு ரபேல் விமானம் கிடைத்துள்ளது.ஒருவேளை சிவப்பு கொடி முன்னகர்ந்தால் போரின் போக்கை ரபேல் விமானங்கள் மாற்றும் என முன்னாள் விமானப்படை தளபதி தனோவா அவர்கள் கூறியுள்ளார்.இன்று மதியம் 5 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளது.

சிறந்த எலக்ட்ரானிக் சூட்,மிகச் சிறந்த மீட்டியர் வான்-வான் ஏவுகணை,ஸ்கல்ப் ஏவுகணையுடன் சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் இந்திய விமானப்படை இனி எதிர்கொள்ள முடியும்.போர் என்று வந்தால் எதிரியின் வான்பாதுகாப்பு அமைப்பை நாம் அழித்தால் அல்லது அடக்கினால் போது சீனாவின் ஹோட்டன் மற்றும் லாசா தளங்களை இந்திய விமானப்படை எளிதாக தாக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

ஹோடன் தளத்தில் சீனா வெளியில் தான் 70 விமானங்களை நிறுத்தியுள்ளது.லசாவில் 26விமானங்கள் சுரங்கங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.இவற்றை எளிதாக அடிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

மிக கடினமான சூழ்நிலையில் ஐந்தாம் தலைமுறை ஜே-20 விமானங்களை கூட சீனா ஏவினாலும் சுகாய் மற்றும் ரபேல் விமானங்களின் உதவியுடன் அவற்றை வெல்லலாம் என அவர் கூறியுள்ளார்.

சீன ஆயுதங்கள் சிறந்தவை எனில் பாகிஸ்தான் ஏன் ரஜோரியில் உள்ள நாங்கி தெக்ரி இந்திய இராணுவ பிரைகேடை தாக்க அமெரிக்கத் தயாரிப்பு எப்-16 விமானங்களை பயன்படுத்த வேண்டும் என தனோவா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த தாக்குதலின் போது பாக்கின் ஜேஎப்-17 விமானத்தை பாதுகாக்க மிராஜ்3/5 விமானங்களை பாக் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுவீடனிடம் இருந்து பெற்ற அவாக்ஸ் விமானங்களை வடக்கில் ஏன் உபயோகிக்க வேண்டும்? ஏன் சீனாவிடம் பெற்ற அவாக்ஸ் விமானங்களை பத்திரமாக தெற்கு பக்கம் உபயோகிக்க வேண்டும்? ஏன் சீன/பாக் தயாரிப்பு விமானமான ஜேஎப்-17 விமானத்தில் துருக்கியிடம் பெற்ற டாக்கெட்டிங் போட் உபயோகிக்க வேண்டும்? ஏன் ஸ்வீடனின் ரேடாரை உபயோகிக்க வேண்டும் ? என தனோவா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்..இதன் மூலம் சீனாவின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சவாலாக விளங்குவது சீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமே.ஆனால் சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் திறந்த வெளியில் தான் இருக்கும்.அவற்றை மறைக்க எந்த காடுகளும் அங்கு இல்லை.ரபேலின் நவீன terrain following weapons மற்றும் விமானிக்கு கிடைக்கும் level II of Digital Terrain Elevation Data உதவியுடன் இவற்றை துல்லியமாக தாக்க முடியும்.நான் முன்பே கூறிய படி ரபேல் இந்திய விமானப்படைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் என தனோவா அவர்கள் கூறியுள்ளார்.

இரஷ்ய அமெரிக்க தரத்தை விட சீன தரம் மோசமானது என அவர் கூறியுள்ளார்.