அந்தமான் அருகே அமெரிக்க கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இணைந்து கூட்டுபயிற்சிகளை மேற்கொள்கின்றன.
இதுபற்றி அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் தாக்குதல் படையணியின் கட்டளை அதிகாரியான ரியர் அட்மிரல் ஜிம் கிர்க் கூறுகையில் இந்திய கடற்படையுடன் இணைந்து செயல்படுவது பெருமிதம் எனவும்,
இந்திய கடற்படையின் ரியர்அட்மிரல் வாட்ஸ்யான் சக்திவாய்ந்த திறமைமிகு படைப்பரிவை வழி நடத்துவதாகவும்,
அவருடைய படைப்பிரிவுடன் நிமிட்ஸ் தாக்குதல் படையணி இணைந்து செயல்படுவது இரு கடற்படைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைந்த தன்மையை காட்டுவதாகவும் கூறினார்.
இந்த கூட்டு பயிற்சியில் இந்தியாவின் அந்தமான் நிகோபார் கட்டளையகம் மற்றும் கடற்படையின் கிழக்கு கட்டளையகம் ஆகியவற்றின் கப்பல்கள் பங்கு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.