
தில்லியில் 10ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கொரோனா மருத்துவமனையை துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்தோ திபெத் எல்லை காவல்படை அமைத்துள்ளது.
இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அப்படையின் தலைமை அதிகாரியான எஸ்.எஸ் தேஸ்வால் எல்லையோரம் உள்ள வீரர்களின் மன உறுதி பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் இந்திய தரைப்படை, விமானப்படை அல்லது இந்தோ திபெத் எல்லை காவல் படை ஆகியவற்றின் வீரர்கள் நாட்டை காக்க உறுதி பூண்டுள்ளனர்.
தங்களது உயிரை கொடுக்கவும் வீரர்கள் துணிந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.