பிரேசில் நாட்டு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பு உள்ள இஸ்ரோ

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on பிரேசில் நாட்டு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பு உள்ள இஸ்ரோ

பிரேசில் நாட்டு அமேசானியா-1 செயற்கை கோளை வரும் ஆகஸ்டு மாதம் விண்ணிற்கு அனுப்பு உள்ளது இஸ்ரோ.

இதற்கான செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.பிஎஸ்எல்வி (PSLV) எனப்படும் போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிகிள் ராக்கெட் உதவியுடன் இந்த செயற்கை கோள் விண்ணுக்கு அனுப்பப்படும்.

ஏவம் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.பிரேசில் சொந்தமாகவே தயாரித்துள்ள முதல் செயற்கை கோளாக இந்த அமேசானியா-1 உள்ளது.

பூமி கண்காணிப்புக்காக இந்த செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளது பிரேசில்.அமெசான் காடுகளை கண்காணிக்கவும் காடுகளை அழித்தலை தடுக்கவும் இந்த செயற்கை கோள் உதவும்.