இஸ்ரேலிய ராணுவம் எதற்கும் தயார்; இஸ்ரேலிய பிரதமர் ஈரானுக்கு எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • July 28, 2020
  • Comments Off on இஸ்ரேலிய ராணுவம் எதற்கும் தயார்; இஸ்ரேலிய பிரதமர் ஈரானுக்கு எச்சரிக்கை !!

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஈரான் மற்றும் ஹெஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் பேசிய அவர் இஸ்ரேலுக்கு எதிரான எந்த தாக்குதலையும் லெபனான் மற்றும் சிரியா அனுமதிக்க கூடாது, அதற்கு அவர்களே முழு பொறுப்பு.

இஸ்ரேல் மீதோ அல்லது இஸ்ரேலிய மக்கள் மீதோ நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் இஸாரேல் பொறுத்து கொள்ளாது எனவும்,

இஸ்ரேல் மிக கடுமையான பதிலடியை கொடுக்க தயாராக உள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஆகியோருடன் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.