ஈரானிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் மற்றும் யூரேனிய செறிவுட்டல் மையங்களை தாக்கிய இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • July 4, 2020
  • Comments Off on ஈரானிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் மற்றும் யூரேனிய செறிவுட்டல் மையங்களை தாக்கிய இஸ்ரேல் !!

கடந்த வாரம் இஸ்ரேல் ஈரானிய ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும், யூரேனிய செறிவுட்டல் மையம் ஒன்றையும் தாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈரானில் நத்தான்ஸ் எனும் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 25அடி ஆழத்தில் விமான குண்டுவீச்சுகளில் இருந்து பாதுகாக்கபட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட யூரேனிய செறிவுட்டல் மையம் ஒன்றில் இஸ்ரேல் சைபர் தாக்குதலை நடத்தி உள்ளது.

இதில் அந்த மையத்தில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது, இதன் காரணமாக இந்த மையம் சுமார் 2 மாதங்களுக்கு செயல்படாது என கூறப்படுகிறது.

அதை போலவே பர்ச்சின் எனும் பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும் இஸ்ரேலிய விமானப்படையின் எஃப்35 விமானங்கள் ஈரானிய வான் எல்லைக்குள் ஊடுருவி தாக்கி அழித்துள்ளன. இந்த மையத்தில் இருந்து ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு ஈரான் ராக்கெட்டுகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.