
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான “பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு” சமீபத்தில் தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் இந்திய துணை கண்டத்தில் அல்காய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த அமைப்புக்கு இந்தியா பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் சுமார் 200 உறுப்பினர்கள் வரை உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
மேலும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தியாவை தனது புதிய மாகாணமாக அறிவித்து “விலாயா ஹிந்த்” என அதற்கு பெயர் சூட்டி உள்ளதாகவும்,
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 180 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மத்திய மாநில அரசுகள் சர்வதேச அமைப்புகளுடன் விரைந்து செயல்பட்டு பயங்கரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும்.