சிரிய தலைநகர் டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிக முக்கியமான ஈரானிய தளபதி ஒருவர் வீழத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டமாஸ்கஸ் நகரில் ஈரானிய தளபதிகள் மற்றும் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்திய கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதில் ஈரானின் ஜெனரல் அலி ஹஜ் ஹூசைன் வீழ்த்தப்பட்டுள்ளார், இவருடன் பலரும் இறந்துள்ளனர்.
அதேபோல் சிரியாவின் டாரா, குனைட்ரா, கிஸ்வாஹ் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.