
இந்திய விமானப்படைக்கு பல ஆண்டு முயற்சிக்கு பின்னர் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டு உள்ளன, சமீபத்தில் ஃபிரெஞ்சு நாட்டில் இருந்து 5 ரஃபேல் விமானங்கள் புறப்பட்டன.
7000கிலோமீட்டர் பயணத்தின் போது இடையே உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபிரெஞ்சு விமானப்படையின் அல் தாஃப்ரா படைதளத்தில் இந்திய ரஃபேல் விமானங்கள் நிறுத்தபட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு அமீரகத்தில் உள்ள அல் தாஃப்ரா மற்றும் கத்தார் நாட்டில் உள்ள அல் உதய்த் விமானப்படை தளங்களுக்கு அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை தாக்குதல்கள் ஈரானிய ராணுவத்தின் பயிற்சிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது அதாவது அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என கூறப்படுகிறது.