சாபஹார் ஸாஹேதான் ரயில்வே திட்டத்தை மேற்பார்வை இட ஈரான் இந்தியாவுக்கு அழைப்பு !!

  • Tamil Defense
  • July 21, 2020
  • Comments Off on சாபஹார் ஸாஹேதான் ரயில்வே திட்டத்தை மேற்பார்வை இட ஈரான் இந்தியாவுக்கு அழைப்பு !!

சாபஹார் ஸாஹேதான் ரயில்வே திட்டத்தை மேற்பார்வை செய்ய ஈரானுக்கான இந்திய தூதர் கத்தம் தர்மேந்திரா அவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அழைப்பை ஈரானிய நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சரும், ஈரானிய ரயில்வே நிறுவன தலைவருமான சயீத் ரஸவ்லி விடுத்துள்ளார்.

இதுபற்றி சயீத் ரஸவ்லி கூறுகையில் இந்தியா வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திக்கு பின்னால் இந்திய ஈரான் நட்புறவை விரும்பாத சக்திகள் இருப்பதாக கூறினார்.

இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா கூறுகையில் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் தனது ஆய்வை முடித்து அறிக்கையை சமர்பித்து உள்ளதாகவும்,தற்போது ஈரான் தரப்பில் இருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த அறிக்கைகாக காத்திருப்பதாகவும் கூறினார்.

சாபஹார் துறைமுகத்தில் இருந்து ஆஃப்கானிஸ்தானுடைய ஸாஹேதான் நகரம் வரையிலான 628 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில்வே பாதை மிகவும் முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.