
காஷ்மீரீல் நுழைந்து பாகிஸ்தானை சேர்ந்த பேட் படை ( பயங்கரவாதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்த குழு) இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பிம்பர் காலி மற்றும் நௌசேரா செக்டார்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படைக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்திய பகுதிகளை ஒட்டி பாக் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை கண்காணித்துள்ளது.
பாக்கின் பேட் படை என்பது பாக் இராணுவத்தின் கமாண்டாே படை மற்றும் லஷ்கர் ,ஜெய்ஸ் போன்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இணைந்த குழு ஆகும்.
இந்திய இராணுவத்தை மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களையும் இந்த படை தற்போது குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளது.சில நாட்களுக்கு முன் முகமது அஸ்லாம் என்பவரை கொடூரமாக வீழ்த்தியது இந்த படை.