ஜாவா கடலில் மூழ்கிய இந்தோனேசிய கடற்படை கப்பல் !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on ஜாவா கடலில் மூழ்கிய இந்தோனேசிய கடற்படை கப்பல் !!

ஜூலை 14ஆம் தேதி காலையில் கங்கென் தீவுக்கு அருகே உள்ள ஜாவா கடல் பகுதியில் இந்தோனேசிய கடற்படை கப்பல் ஒன்று மூழ்கி உள்ளது.

மூழ்கிய கப்பல் கே.ஆர்.ஐ. தெலுக் ஜகார்த்தா 51 எனும் நடுத்தர படைக்குவிப்பு கலன் என கூறப்படுகிறது.

இந்த கப்பல் 1900 டன்கள் எடையும், 600 டன்கள் சுமைதிறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் இருந்து 55 வீரர்களும் மீட்கப்பட்டு உள்ளனர், மோசமான வானிலை காரணமாக கடல்நீர் உட்புகுந்து கப்பல் மூழ்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.