1 min read
ஆஸ்திரியாவிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட போர் விமானங்களை வாங்க இந்தோனேசியா முடிவு !!
ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சர் க்ளாடியா டேன்னர் அவர்களுக்கு இதுகுறித்து இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ப்ரபவோ ஸூபியன்டோ கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ஆஸ்திரிய விமானப்படை பயன்படுத்தி வரும் 15 யூரோஃபைட்டர் டைஃபூன் விமானங்களை இந்தோனேசிய விமானப்படையை நவீனப்படுத்தும் பொருட்டு வாங்க விரும்புகிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த விமானங்களை ஆஸ்திரியா கடந்த 2002ஆம் ஆண்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது, இவை வான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ட்ரான்செ-1 ரகத்தை சேர்ந்தவை ஆகும்.