பிரம்மாஸ் ஏவுகணை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி ??

  • Tamil Defense
  • July 9, 2020
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி ??

கடந்த ஆண்டு முதலே இந்தோனேசியா நமது பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்தோனேசியாவுக்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தோனேசியா தனது கடலோர பாதுகாப்புக்கு 290 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் பிரம்மாஸ் ஏவுகணைகள் மீதும்,

போர் விமானங்களில் கொண்டு சென்று தாக்க உதவும் “பிரம்மாஸ் ஏ” ரக ஏவுகணைகளை வாங்கவும் ஆர்வம் காட்டி உள்ளது.

இந்த பிரம்மாஸ் ஏ ரக ஏவுகணைகளை இந்தோனேசியா வாங்கினால் அந்நாட்டு விமானப்படையில் உள்ள சுகோய்27 மற்றும் சுகோய்30 மார்க்2 ரக விமானங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் அப்போது தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.