இந்தியாவின் உடனடி இலகுரக டாங்கி தேவையை உணர்த்திய சீன பிரச்சினை !
1 min read

இந்தியாவின் உடனடி இலகுரக டாங்கி தேவையை உணர்த்திய சீன பிரச்சினை !

இந்தியாவின் உடனடி இலகுரக டாங்கி தேவையை உணர்த்திய சீன பிரச்சினை சமாளிக்க டாடா கெஸ்ட்ரல் கவச வாகனத்தை பயன்படுத்தலாம் !!

சமீபத்தில் சீனா தனது ZTQ15 எனும் இலகுரக டாங்கியை இந்திய எல்லையோரம் நகர்த்தியதாக அறிவித்த போது இந்தியா உடனடியாக அதை விட வலிமையான திறன் வாயந்த டி72 மற்றும் டி90 டாங்கிகளை எல்லைக்கு அனுப்பியது.

ஆனால் அவற்றின் அளவு மற்றும் அதிக எடை காரணமாக குறுகலான பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் இயக்குவது மிகவும் கடினமான செயலாகும்.
இந்த பகுதிகளுக்கு இலகுரக டாங்கிகள் தான் மிகவும் ஏற்றவை ஆகும்.

இந்தியா மிக நீண்ட காலமாகவே இலகுரக டாங்கி தயாரிக்க முயன்று வருகிறது, முன்னர் EX TANK எனும் இலகுரக டாங்கியை நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்தது ஆனால் அது சோதனைகளில் தோல்வியை தழுவியது ஆகவே அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது சீனாவுடனான எல்லை பிரச்சினை இலகுரக டாங்கியின் தேவையை மீண்டும் நமக்கு உணர்த்தி உள்ளது.

ஆகவே நாம் ஒரு முழுமையான இலகுரக டாங்கியை தயாரிக்கும் வரையில் உடனடியாக நமது தேவையை பூர்த்தி செய்ய டாடா கெஸ்ட்ரல் கவச வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

600குதிரை சக்தி திறன் கொண்ட டர்போசார்ஜ் என்ஜினை கொண்ட இந்த வாகனம் ஏற்கனவே லடாக் மற்றும் சிக்கீம் பகுதிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இங்கிலாந்தில் இருந்து தானியங்கி லோடர் கருவிகளையுமீ, 105மிமீ அளவு கொண்ட எம்68ஏ1இ4 துப்பாக்கிகளையும் மஸ்ஸல் ப்ரேக்குடன் வாங்கி இந்த வாகனத்தில் பொருத்தி பயன்படுத்தலாம்.

நிச்சயமாக இலகுரக டாங்கியாகவே உருவாக்கப்பட்ட ZTQ15 க்கு ஏற்ற போட்டியாக இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாகனம் இருக்காது ஆனால் நாம் இலகுரக டாங்கிகள் தயாரிக்கும் வரை இந்த மேம்படுத்தப்பட்ட வாகனம் போதுமான தாக்குதல் திறனை அளிக்கும்.