பூட்டானில் சீனா உரிமை கோரும் பகுதியில் சாலை அமைக்க இந்தியா விருப்பம் !!

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on பூட்டானில் சீனா உரிமை கோரும் பகுதியில் சாலை அமைக்க இந்தியா விருப்பம் !!

பூட்டான் நாட்டின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் ட்ராஷிகாங் மாவட்டம் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் சமீபத்தில் சர்வதேச அமைப்பு ஒன்று சாக்டெங் பகுதியில் சரணாலயம் அமைப்பது குறித்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அது தங்களுக்கு உரிய பகுதி ஆகவே அங்கு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த பகுதியில் தற்போது இந்தியா சாலை ஒன்றை அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த சாலை கவுகாத்தி மற்றும் தவாங் இடையிலான 150 கிலோமீட்டர் பயண தூரத்தை குறைக்கும்.

இதன்மூலம் விரைவாக சீனா குறிவைக்கும் அருணாச்சல பிரதேசம் மற்றும் பூட்டானுடைய கிழக்கு பகுதிக்கு இந்தியாவால் படைகளை அனுப்ப முடியும்.

பூட்டானுடைய இந்த பகுதி மற்றும் அருணாச்சல பிரதேச மாநில பகுதிகளை திபெத்தின் அங்கமாக சீனா கருதி இத்தகைய சட்ட விரோதமான உரிமை கோரல்களில் ஈடுபடுகிறது குறிப்பிடத்தக்கது.