பிரான்சிடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட முதல் தொகுதி ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன.இவை இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும்.
அரபு அமீரகத்தின் அல் தாப்ரா தளத்தில் இருந்து கிளம்பி மதியம் 2மணி அளவில் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளம் வர உள்ள விமானங்களை விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் உள்ளார்.
இந்நிலையில் பிரான்சில் ரபேல் விமானத்தில் பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகளின் திறமைகளை பிரான்ஸ் “மார்வெலஸ்” என புகழ்ந்து கூறியுள்ளது.
இந்த விமானங்களை மிகத்திறமையாக அவர்கள் கையாள்வார்கள் என பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் கூறியுள்ளார்.