பிரதமர் மோடி மற்றும் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் ஆகியோர் லடாக் விசிட் !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on பிரதமர் மோடி மற்றும் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் ஆகியோர் லடாக் விசிட் !!

பிரதமர் மோடி களநிலை பற்றி ஆய்வு செய்ய லடாக் சென்றுள்ளார்.

தற்போது லடாக்கில் நிமு எனும் முன்னனி நிலையில் தரைப்படை, விமானப்படை, ஐ.டி.பி.பி வீரர்களுடன் பேசிய அவர், தரைப்படை அதிகாரிகளிடம் களநிலை பற்றி தெரிந்து கொண்டார்.

பின்னர் லே நகரில் உள்ள 14ஆவது கோர் தலைமையகத்தில் தரைப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும் லடாக் சென்றுள்ளார்.

இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தரைப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே ஆகியோர் லடாக் செல்லவிருந்த நிலையில் அந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.