பிரதமர் மோடி லடாக் விசிட் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறதா இந்தியா !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on பிரதமர் மோடி லடாக் விசிட் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறதா இந்தியா !!

இன்று பிரதமர் மோடி தீடிரென லடாக் விசிட் மேற்கொண்டு களத்தில் உள்ள வீரர்களை சந்தித்து பேசினார் பின்னர் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

லடாக்கில் ராணுவ வீரர்கள் இடையே அவர் ஆற்றிய உரையில் இருந்து சில முக்கியமான பாயின்டுகளை வைத்து பார்க்கும் போது இந்தியா ராணுவ நகர்வுக்கான நிலையை நோக்கி நகர்வது தெரிகிறது.

உதாரணமாக

1)உடனடி ஆயுதம் மற்றும் தளவாட கொள்முதல்

2) எல்லையோரம் விரைவான உள்கட்டமைப்பு

3) குடும்பங்களுக்கு ஒய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி

4) 130 கோடி இந்திய மக்களின் ஆதரவு

போன்றவை அவரது பேச்சில் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துமே ஒரு போர் வீரனுக்கு தனது நாட்டை உயிரை கொடுத்து பாதுகாக்க தூண்டும் வகையிலானவை ஆகும்.

தான் இல்லாவிட்டாலும் தனது பெற்றோர் மனைவி குழந்தைகளை அரசும், நாடும் மக்களும் கவனித்து கொள்வர் எனும் தன்னம்பிக்கையை அளிக்க கூடியது.

எது எப்படியோ அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.