
இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தராமேந்திர ப்ரதான் மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் டேன் ப்ருய்லெட் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் இந்தியா அமெரிக்காவில் தனது கச்சா எண்ணெயை சேகரித்து வைக்கும் முடிவு மிக முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய அமெரிக்க முலோபாய எரிசக்தி பங்களிப்பு திட்டத்தின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாளம் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் இந்திய முலோபாய எரிபொருள் சேமிப்பு நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறினார்.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள மூன்று சேகரிப்பு நிலையங்களும் முழு கொள்ளளவை அடைந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தக்ஷிலா இன்ஸ்டிடியூட்டின் போராசிரியர்களில் ஒருவரான அனுபம் மனுர் கூறுகையில் இந்தியா இத்தகைய முடிவை எடுத்துள்ளது வரவேற்கதக்கது தான் அதை போலவே ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனும் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு தான் சீனாவோ பாகிஸ்தானோ வேறு நாடுகளில் உள்ள நமது சேமிப்பு கிடங்குகளை தாக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
தற்போதைய நிலையில் நமது சேமிப்பு கிடங்குகளில் சுமார் 5.33 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் வெறுமனே 9.5 நாட்களுக்கு போதுமானதாகும், மேலதிக சேமிப்பு கிடங்குகளின் கட்டுமான பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது.