அந்தமானில் மாபெரும் போர்பயிற்சி; சீனாவை மிரட்டும் இந்திய கடற்படை
1 min read

அந்தமானில் மாபெரும் போர்பயிற்சி; சீனாவை மிரட்டும் இந்திய கடற்படை

கல்வான் பிரச்சனையால் இந்தியா சீனா உறவு மிக மோசமடைந்துள்ளது.இந்திய இராணுவமும் விமானப்படையும் தனது கவனத்தை லடாக் பகுதியில் குவித்துள்ள நிலையில் அந்தமான் பகுதியில் ஒரு மாபெரும் பயிற்சியை கடற்படை தொடங்கியுள்ளது.

கடற்படையின் இந்த போர்பயிற்சி சீனாவுக்கு எச்சரிக்கையூட்டும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.மலாக்கா நீட்சி வழியாக தான் சீனாவின் பல கப்பல்கள் எண்ணைய் முதலியவற்றுடன் சீனா செல்கிறது.

மறுபுறம் அமெரிக்க தனது இரு விமானம் தாங்கி கப்பலுடன் போர்பயிற்சி நடத்தி வருகிறது.
டெஸ்ட்ராயர்கள்,பிரைகேட்கள்,நீர்மூழ்கிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து விமானங்களுடன் இந்திய கடற்படை போர்பயிற்சியினை தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தின் அரக்கோணத்தில் உள்ள ராஜாளி படைத்தளத்தில் இருந்து பி-8ஐ நீர்மூழ்கி அழிப்பு ரோந்து விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

இந்திய ஏற்கனவே தென்சீனக்கடல் உலக நாடுகளுக்கு பொதுவானது அங்கு அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என கூறியுள்ளது.

தவிர சீனாவிற்கு எதிராக அமெரிக்கா,ஆஸ்திரேலியா ,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.