
இந்திய கடற்படையின் பி8ஐ பொஸைடான் கண்காணிப்பு விமானங்கள் லடாக் பகுதிக்கு நகர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்திய கடற்படையின் பி8ஐ கண்காணிப்பு விமானங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
இந்த விமானங்கள் எல்லையோரம் சீன ராணுவ நடமாட்டங்கள் நகர்வுகளை கண்காணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் எல்லையோரம் இவை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
2017ஆம் ஆண்டு டோக்லாமில் சீனாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சினையின் போதும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.