இந்தியாவின் பி8 விமானங்களுக்கு மிக நவீன ஆயுதம் !!
இந்திய கடற்படை உலகின் அதிநவீன நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு வேட்டை விமானமான பி8ஐ இயக்கி வருகிறது.
இந்த விமானங்கள் சீன மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு எதிரான மிக முக்கியமான ஆயுத அமைப்பாகும்.
இந்த விமானங்களில் ஏற்கனவே ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதை விட அதிநவீனமான புதிய ஆயுதம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஏவுகணையின் பெயர் ஏ.ஜி.எம் 158சி ஆகும். இது தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
இந்த ஏவுகணை சுமார் 450கிலோமீட்டர் முதல் 1000கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக்கூடியது அதாவது வெடிபொருளின் எடைக்கேற்ப தாக்கும் தொலைவும் வேறுபடும்.
இந்த ஏவுகணை தானாகவே இலக்கை கண்டுபிடிக்கவும், தடைகளை தவிர்க்கவும்,குறைந்த உயரத்தில் பறக்கவும், நடுவானிலேயே வழி தெரிந்த பறக்கவும் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏவுகணை ஒரு மிகப்பெரிய படையணியிலும் சரியாக இலக்கை கண்டுபிடித்து சென்று தாக்கும் திறனை கொண்டுள்ளது.
தற்போது இது சோதனையில் உள்ளது, சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கும் இது வழங்கப்படும் என கூறப்படுகிறது.