லடாக்கில் இந்திய கடற்படையின் மிக்29 போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • July 22, 2020
  • Comments Off on லடாக்கில் இந்திய கடற்படையின் மிக்29 போர் விமானங்கள் !!

இந்திய கடற்படையின் மிக்29 கே போர் விமானங்கள் லடாக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாகவும், வடக்கு பிராந்தியத்தில் முக்கிய விமானப்படை தளங்களில் இந்த போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

இந்திய கடற்படையின் போர் விமானங்கள் வடக்கு பிராந்திய பகுதியில் விரைவில் நிலைநிறுத்தப்படும் என ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய விமானப்படை 40மிக் 29 போர் விமானங்களை இயக்கி வருகிறது, அவற்றில் 18 விமானங்கள் விக்ரமாதித்யா கப்பலில் எப்போதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால் அதிகபட்சமாக சுமார் 26 விமானங்களை வரை இக்கப்பலில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை இந்திய விமானப்படைக்கு பேருதவியாக இருக்கும் எனவும் வடக்கு பிராந்திய பாதுகாப்பு வலுப்படும் எனவும் கூறப்படுகிறது