இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியை தனது முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது !!
இந்திய கடற்படை ஏழு ஆபரேஷன்கள் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியை தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
அந்த நடவடிக்கைகளை கீழே காணலாம்,
1) MALDEP – மலாக்கா ஜலசந்தியின் வாய்ப்பகுதியில் எப்போதும் ஒரு இந்திய கடற்படை கப்பல் ரோந்து பணியில் உள்ளது.
2) NORDEP – வங்காள விரிகுடா, வங்கதேசம், மியான்மர் எல்லை பகுதிகள், அந்தமானின் சில பகுதிகளில் ரோந்து பணி.
3) ANDEP – வடக்கு அந்தமான் மற்றும் தெற்கு நிகோபார் பகுதிகளில் ரோந்து பணி.
4) GULFDEP – வடக்கு அரபிக்கடல்,ஹோர்முஸ் மற்றும் பெர்சிய வளைகுடா பகுதிகளில் ரோந்து பணி.
5)POGDEP – ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளை தடுப்பு ரோந்து பணி.
6) CENDEP – தென்னிந்திய கடல்பகுதிகள், இலங்கை மற்றும் மாலத்தீவு பகுதிகளில் ரோந்து பணி.
7) IODEP – இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி, மொரீஷியஸ்,செஷல்ஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணி.
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை ஏழாக பிரித்து இந்திய கடற்படை தனது கப்பல்களை அனுப்பி கண்காணித்து வருகிறது.
இதில் புவிசார் அரசியலின் தாக்கம் அதிகம் நிறைந்து வளைகுடா பகுதி, மலாக்கா ஜலசந்தி ஆகியவையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.