
இராமேஷ்வரம் அருகே உள்ள மனாலி தீவில் மீனவர் படகு ஒன்று கவிந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்த ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக வானூர்தியை அனுப்பியது.
கடற்கரை கோரல் ரீப் அருகே 8 நாட்டிகல் மைல் தொலைவில் படகு விபத்துக்குள்ளானதை கடற்படை வீரர்கள் அறிந்து உடனடியாக உதவிக்கு விரைந்தனர்.
கப்பல் அங்கு மிக வேகமாக மூழ்கி வருவதை உணர்ந்த வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர்.
நான்கு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.