டி-90 டேங்குகளுக்காக கண்ணிவெடி அகற்றும் கலப்பை வாங்க முடிவு

சுமார் 557கோடிகள் ரூபாய் செலவில் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 1517 கண்ணிவெடிகளை அகற்றும் கலப்பை வாங்க இராணுவ அமைச்சகம் முடிவெடிடுத்துள்ளது.இந்த கலப்பைகள் டி-90 டேங்குகளில் இணைத்து உபயோகிக்கப்படும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தக் கலப்பைகள் பெறப்பட உள்ளன.

கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிகளில் அதை அகற்ற டேங்குகளுக்கு இந்த கலப்பை உதவும்.இது டேங்கிற்கும் அதை இயக்கும் வீரர்களுக்கும் பாதுகாப்பை தரும்.

எதிரி எல்லைக்குள் ஆழ ஊடுருவும் போது கண்ணிவெடி நிறைந்த பகுதிகளிலும் செல்ல வேண்டியிருக்கும்.அப்படி செல்லும் போது நமது வீரர்களுக்கு அது பெரும் தடையாக அமையும்.டி-90யில் இந்த கலப்பைகளை இணைத்து உபயோகப்படுத்தும் போது வீரர்கள் குழு டேங்கின் பின்புறம் செல்லலாம்.

தற்போது சீன எல்லையிலும் டி-90 டேங்குகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.