மிக முக்கியமான சோதனையை சந்திக்க போகும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரான பயிற்சி ஜெட் விமானம் !!

  • Tamil Defense
  • July 8, 2020
  • Comments Off on மிக முக்கியமான சோதனையை சந்திக்க போகும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரான பயிற்சி ஜெட் விமானம் !!

பல வருடங்களாக இந்திய விமானப்படைக்கு பயிற்சி ஜெட் விமானங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி வருகிறோம்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டின் பி.ஏ.இ நிறுவனத்திடம் இருந்து ஹாக் எனும் பயிற்சி ஜெட் விமானத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறோம், இந்த விமானத்தை தான் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் சாகச குழுவினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதை தவிர டர்போப்ராப் என்ஜின் கொண்ட பிலேட்டஸ் பிசி7 விமானம், ஹெச்.ஏ.எல் ஹெச்.ஜே.டி கிரண் மார்க்2 ஜெட் பயிற்சி விமானம் ஆகியவற்றை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது.

ஆனால் நீண்ட காலமாகவே ஹாக் விமானத்திற்கு நிகரான அதிநவீன பயிற்சி ஜெட் விமானத்தை தயாரிக்க முயன்று வந்தது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹெ.ஏ.எல் நிறுவனம் சித்தாரா எனும் விமானத்தை உருவாக்கி உள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல்முறையாக பறந்த இந்த விமானம் ஸ்பின் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது இதன் காரணமாக இந்திய விமானப்படை இதனை நிராகரித்தது.

இந்த நிலையில் இந்த விமானத்தை மறுபடியும் இந்த மாதம் மேற்குறிப்பிட்ட ஸ்பின் சோதனைக்கு உட்படுத்த ஹெ.ஏ.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதில் வெற்றி பெற்றால் தான் தரம் உறுதி செய்யப்பட்டு விமானப்படையில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.