விரைவில் இந்தியாவில் தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on விரைவில் இந்தியாவில் தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது !!

இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் என்கிற நிறுவனம் கொரோனா நோய்க்கான கொவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

இந்த மருந்து விலங்குகளில் சோதிக்கப்பட்டு விரைவில் மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட உள்ளது என்று அறிவித்தது.

இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒரு கடிதத்தை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளது.

அதில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை வெற்றி பெற வைக்க விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மருத்துவ ரீதியாக மனிதர்களில் பரிசோதித்து முடிவுகள் தெரியவர குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம், உதாரணமாக அம்மைகட்டு நோய்க்கான மருந்தை தயாரிக்க சில ஆண்டுகள் ஆனது.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது இந்த மருந்தை பரிசோதிக்கும் முறைகளை பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து விரைவுபடுத்த விரும்புகிறது, அதற்காக நாடு முழுவதும் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த மருந்து வெற்றி பெறும் பட்சத்தில் வருகிற ஆகஸ்ட்15 இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினமன்று மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பல கோடி மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட இந்த சோதனை வெற்றி பெற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஜெய்ஹிந்த்