
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவிடம் ஒரு நல்ல உளவுத்துறை இருந்தது.அதன் பெயர் தான் இன்டலிஜன்ஸ் பீராே அதாவது ஐபி எனக் கூறுவர்.ஆனால் ஒரு காலத்திற்கு பிறகு பாகிஸ்தான் சீக்கிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்து சில கேடுகெட்ட வேலைகள் செய்ததால் ஐபியால் சரியாக செயல்படமுடியாமல் போயிற்று.
இந்த நடவடிக்கை இடைவெளியை குறைக்க அப்போதைய பிரதமர் இந்திரா அவர்கள் இந்தியாவுக்கென்றே தனியாக வெளி விவகாரங்களை கவனிக்கிற உளவுத் துறை வேண்டும் என்பதை அறிந்து 1968
ல் இராமேஸ்வர் நாத் காவ் என்பவர் “ரா” அமைப்பை தொடங்கினார்.இந்த “ரா ” அமைப்பின் முதல் குறிக்கோள் பாகிஸ்தானை கண்காணிப்பது இரண்டாவது சீனா.
1974 ல் இந்தியா பொக்ரானில் அணுஆயுதச் சோதனை செய்து கர்ஜித்த போது அது துணைக்கண்டத்தில் போட்டியை உருவாக்கியது.இதனால் பயந்த பாகிஸ்தான் தனக்கான அணுஆயுதத் தேவைக்காக அதை கட்ட தயாரானது.அவர்களின் குறிக்கோள் அணுவைப் புரிந்து கொண்டு ஒரு அணு ஆயுதத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதே.அதற்கான வேலைப்பாடுகளுக்கு தயாராகியது.
ககுடா நடவடிக்கை
1977ல் “ரா” வால் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம் பாகிஸ்தானின் அதிரகசிய ஆயுத தயாரிப்பு திட்டத்தை கண்டறிந்து தகவல் பெறுவதே.இதில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டும் இந்திய உளவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அதாவது 1970களிலேயே இந்தியா பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உளவு தகவல்களை சேகரிக்க ஆட்களை வைத்திருந்தது.இந்த மொத்த வலையமைப்பும் பாக்கிஸ்தானின் அணுஆயுதம் தொடர்பான ஆராய்ச்சி நடக்கும் இடத்தை கண்டறிவதில் களமிறக்கப்பட , பின்பு பாக் அணு ஆயுதம் தயாரிப்பதாக தகவல்கள் கிடைக்கத் தொடங்கியது.இடத்தை பற்றியும் தகவல் கிடைக்க அதை உறுதிப்படுத்துவது முக்கியமான பணி.
இந்த இடத்தில் தான் நடக்கிறது என தெரிந்தும் உள்நுழைந்து அதை உறுதிப்படுத்துவது மிக கடினமான பணி.
என்ன செய்யலாம் என “ரா” ஆழ்ந்திருந்த வேலையில் ஒரு சிறிய யோசனை தோன்றியது.கேட்பதற்கு படத்தில் வரும் கதை போல இருந்தாலும் ரா இந்த விசயத்தை செய்தது.அது என்னவென்றால் தலைமுடியை சேகரிப்பது.ஆம்,ககுடா ஆராய்ச்சி கழகத்தில் வேலை செய்பவர்கள் முடிவெட்டும் கடைகளில் சென்று தலைமுடிகளை ரா சேகரித்தது.
இந்த தலைமுடிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு கதிரியக்க கூறுகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதன் மூலம் இந்தியா ககுடா ஆராய்சி கூடம் புளுட்டோனியத்தை செறிவூட்ட பயன்படுகிறது என்பதை உறுதிபடுத்தியது.
இதன் பிறகு இஸ்ரேல் இதை அழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது.ஆனால் இந்தியா பின்வாங்கியது.பாகிஸ்தான் கையில் அணுஆயுதம் இருப்பது இஸ்ரேலுக்கும் ஆபத்து.இஸ்ரேல் இதனால் பாதுகாப்பற்று உணர்ந்தது.இதன் பிறகு பல உளவுத் தகவல்களை இரு நாட்டு உளவு அமைப்பும் திரட்டின.மேலும் பாக் அணுஆயுத தந்தை எனப்படும் ஏ.கியூ கான் வடகொரியா சென்று வந்ததும் கண்டறியப்பட்டது.
அப்போதைய பிரதமர் மோராஜிதேசாய் பாக் தளபதி ஜியாவுல் ஹக்கை தொலைபேசியில் அழைத்து உங்களது இரகசிய நடவடிக்கை தெரியும் என வாயை விட பாக் விழித்து ரா உளவாளிகளை கண்டுபிடித்து வலையமைப்பை உடைக்க தொடங்கியது.மேலும் இஸ்ரேலின் வான்குண்டு தாக்குதலில் இருந்து ககுடா ஆராய்ச்சி கூடத்தை காப்பாற்ற கோரி தனது கூட்டாளியான அமெரிக்காவை நாடியது பாகிஸ்தான்.
அதன் பிறகு அரசியல்வாதிகளுக்கும் ரா அதிகாரிகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.மொரார்ஜி தேசாய்க்கும் ரா தலைவர் காவ் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட
அவர் பதவியை துறந்தார்.மொரார்ஜி தேசாய் ராவிற்கு நிதியை 30% முதல் 40% வரையாக குறைத்தார்.ரா பணம் இல்லாமல் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த திணறியது.
மேலும் அடுத்து ரா தலைவராக வந்த கேஎஸ் நாயர் அவர்களையும் நடவடிக்கை வரியாக தனிமைப்படுத்தினார்.
பாக் தளபதி ஜியவுல் ஹக்கிடம் தேசாய் தொலைபேசியில் பேசும் போது இந்தியாவிற்கு உங்கள் திட்டம் பற்றி தெரியும் என வாய்விட்டதில் பாகிஸ்தானில் இருந்த இந்திய ரா உளவாளிகளில் வலையமைப்பு நொறுக்கப்பட்டது.இதில் எத்தனை உளவாளிகள் இறந்தனர் என எனக்கு தெரியவில்லை.
பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.மொத்த வலையமைப்பும் அழிக்கப்பட்டது.அங்கு மீண்டும் இந்தியா தனது உளவு நடவடிக்கைகளை தொடங்க பத்து ஆண்டுகள் பிடித்தது.
இஸ்ரேலின் குண்டுவீசி அழிக்கும் நடவடிக்கையும் இந்தியா ஒத்துழைக்கதாலும் அமெரிக்க அழுத்தத்தாலும் கைவிடப்பட்டதாக தெரிகிறது.