இந்த வருடத்தில் 134 புதிய போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on இந்த வருடத்தில் 134 புதிய போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !!

இந்திய விமானப்படை 134 புதிய போர் விமானங்களை வாங்கும் வகையில் இந்த வருடத்திற்குள் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய உள்ளது.

இந்த 134 போர் விமானங்களில் 33 ரஷ்ய தயாரிப்பு ஆகும். 21 மிக்29 யுபிஜி மற்றும் 12 சு30 எம்.கே.ஐ ஆகிய விமானங்கள் அடக்கம்.

இதன் பிறகு 83 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 18 தேஜாஸ் மார்க்-1 பயிற்சி விமானங்களையும் வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது.

இதை தவிர இந்திய விமானப்படை ஏற்கனவே ஆர்டர் செய்து பெற தொடங்கி உள்ள 24 தேஜாஸ் மார்க்1 FOC விமானங்கள் மற்றும் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவற்றை வரவேற்க இந்திய விமானப்படை தனது தளங்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.